Followers

Wednesday, May 20, 2009

Newyork nagaram

Niyuyaark Nagaram uRangum naeram thanimai adarnthathu
Paniyum Padarnthathu
Kappal iRangiyae kaaRRum karaiyil nadanthathu
Naancu kaNNaadi suvarkaLuKkuLLae naanum mezukuvarththiyum
Thanimai thanimaiyo Kodumai kodumaiyo

Paechchellaam thaalattu poala ennai uranga vaikka nee illai
thinamum oru muththam thanthu kaalai kaapi kodukka nee illai
vizhiyil vizhum thuusi thannai naavaal edukka nee ingu illai
manathilezum kuzappam thannai theerka nee inge illai
Naan inge neeyum angae
intha thanimaiyil nimishangaL varushamaanathaenoa

Vaan ingae Neelam angae
intha uvamaikku iruvarum viLakkamaanathaenoa

NaatkuRippil nuuRu thadavai unthan peyarai ezhuthum en paenaa
ezhuthiyathum eRumbu moikka peyarum aanathenna thaenaa
Jil endru boomi irunthum intha tharunaththil kuLir kaalam Koadai aanathaenoa
Vaa anbe neeyum vanthaal senthazal kooda panikkatti poala maaRumae !
....................
நியுயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது
பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ

பேச்செல்லாம் தாலட்டு போல என்னை உரங்க வைக்க நீ இல்லை
தினமும் ஒரு முத்தம் தந்து காலை காபி கொடுக்க நீ இல்லை
விழியில் விழும் தூசி தன்னை நாவால் எடுக்க நீ இங்கு இல்லை
மனதிலெழும் குழப்பம் தன்னை தீர்க நீ இங்கெ இல்லை
நான் இங்கெ நீயும் அங்கே
இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷமானதேனோ

வான் இங்கே நீலம் அங்கே
இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ

நாட்குறிப்பில் நூறு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனதென்ன தேனா
ஜில் என்று பூமி இருந்தும் இந்த தருனத்தில் குளிர் காலம் கோடை ஆனதேனோ
வா அன்பே நீயும் வந்தால் செந்தழல் கூட பனிக்கட்டி போல மாறுமே

kaalaiyil dhinamum

kaalaiyil dhinamum kaN vizhiththaal
naan kai thozhum dhaevadhai amma a
anbendraalae ammaa, en thaay poal aagidumaa

imai poal iravum pagalum ennai kaaththa annaiyae
un anbu paarththa pinbu adhai vida vaanam bhoomi yaavum siRiyadhu

(kaalaiyil dhinamum)

niRai maadha nilavae vaa vaa
nadai poadu medhuvaa medhuvaa
azhagae un paadu aRivaenammaa
masakkaigaL mayakkam koNdu
madi saayum vaazhai thaNdu
sumaiyalla baaram sugham dhaanammaa
thaayaana pinbu dhaan nee peNmani
thoaL meedhu thoongadi kaNmani kaNmani

(kaalaiyil dhinamum)

oru piLLai karuvil koNdu
oru piLLai kaiyil koNdu
uRavaadum yoagam oru thaaykkindru
mazhalaip poal undhan nenjam
uRangattum paavam konjam
thaayku pin thaaram naan dhaanayyaa
thaalaelo paaduvaen nee thoongadaa
thaayaakki vaiththadhae
neeyadaa -neeyadaa
thalaivaa nee endhan thalaichchan piLLai
paadugiRaen naan thaaloa
panisae poovizhith thaaloa ponmani thaalaeloa
nilavoa nilaththil iRangi unnai konja ennudhoa
adhi kaalai saeval koovum adhu varai
vanji nenjil neeyum uRangidu
thalaivaa nee endhan thalaichchan piLLai
paadugiRaen naan thaaloa
panisae poovizhith thaaloa ponmani thaalaeloa
.........................
காலையில் தினமும் கண் விழித்தால்
நான் கை தொழும் தேவதை அம்ம அ
அன்பென்றாலே அம்மா, என் தாய் போல் ஆகிடுமா

இமை போல் இரவும் பகலும் என்னை காத்த அன்னையே
உன் அன்பு பார்த்த பின்பு அதை விட வானம் பூமி யாவும் சிறியது

(காலையில் தினமும்)

நிறை மாத நிலவே வா வா
நடை போடு மெதுவா மெதுவா
அழகே உன் பாடு அறிவேனம்மா
மசக்கைகள் மயக்கம் கொண்டு
மடி சாயும் வாழை தண்டு
சுமையல்ல பாரம் சுகம் தானம்மா
தாயான பின்பு தான் நீ பெண்மனி
தோள் மீது தூங்கடி கண்மனி கண்மனி

(காலையில் தினமும்)

ஒரு பிள்ளை கருவில் கொண்டு
ஒரு பிள்ளை கையில் கொண்டு
உறவாடும் யோகம் ஒரு தாய்க்கின்று
மழலைப் போல் உந்தன் நெஞ்சம்
உறங்கட்டும் பாவம் கொஞ்சம்
தாய்கு பின் தாரம் நான் தானய்யா
தாலேலோ பாடுவேன் நீ தூங்கடா
தாயாக்கி வைத்ததே
நீயடா -நீயடா
தலைவா நீ எந்தன் தலைச்சன் பிள்ளை
பாடுகிறேன் நான் தாலோ
பனிசே பூவிழித் தாலோ பொன்மனி தாலேலோ
நிலவோ நிலத்தில் இறங்கி உன்னை கொஞ்ச என்னுதோ
அதி காலை சேவல் கூவும் அது வரை
வஞ்சி நெஞ்சில் நீயும் உறங்கிடு
தலைவா நீ எந்தன் தலைச்சன் பிள்ளை
பாடுகிறேன் நான் தாலோ
பனிசே பூவிழித் தாலோ பொன்மனி தாலேலோ

Monday, May 18, 2009

Amma endru-அம்மா என்றழைக்காத உயிரில்லையே

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது


அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நான்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே!


பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
இவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே!

Raakamma-ராக்கம்மா கையத்தட்டு

ராக்கம்மா கையத்தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு
ராசாத்தி பந்தல் நட்டு ராவெல்லாம் தாளந்தட்டு
ஒரு கட்டுக்காவல் இது ஒத்துக்காது
எனக் கட்டிப்போட ஒரு சூரன் ஏது
ஜாங்குஜக்குச் ஜஜக்குஜக்குஜாங்குஜக்குசஜ
ஜாங்குஜக்குச் ஜஜக்குஜக்குஜாங்குஜக்குசஜ

(அடி ரக்கம்மா)

தேரிழுக்கும் நாளும் தெப்பம் விடும் நாளும் மச்சான் இங்கே அது ஏன் கூறு
அட ஊருசனம் யாவும் ஒத்தமையாச் சேரும் வம்பும் தும்பும் இல்ல நீ பாரு
மத்தளச் சத்தம் எட்டு ஊருதான் எட்டணும் தம்பி அடி ஜோராக
வக்கிர வாணம் அந்த வானையே தெக்கணும் தம்பி விடு நேராக
அட தம்பட்டம் தாரதான் தட்டிப்பாடு

ஜாங்குஜக்குச் ஜஜக்குஜக்குஜாங்குஜக்குசஜ
ஜாங்குஜக்குச் ஜஜக்குஜக்குஜாங்குஜக்குசஜ

வாசலுக்கு வாசல் வன்ண வண்ணமாக இங்கே அங்கே ஓடி வௌளக்கேத்து
அட தட்டிருட்டுப் போச்சு பட்ட பகலாச்சு எங்கும் இன்பம் என்று நீ கூறு
நல்லவர்க்கெல்லாம் எதிர்காலமே நம்பிக்கை வைத்தால் வந்து சேராதா
உள்ளங்களெல்லாம் ஒன்று கூடினால் உள்ளங்கையில்தான் வெற்றி வாராதா
அட என்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள்தான்

அடி முத்தம்மா முத்தம் சிந்து பனி முத்துப்போல் நித்தம் வந்து
பூமால வெச்சிப்புட்டு புது பாட்டெல்லாம் வெளுத்துக்கட்டு

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்
பனித்த சடையும் பவழம் போல் பால் மேனியும்
இனித்தமுடனெடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே


ராக்கம்மா கையத்தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு
ராக்கோழி மேளங்கொட்டு இந்த ராசாவின் நெஞ்சத்தொட்டு
அட ஒன்னப்போல இங்கு நானுந்தாண்டி ஒண்ணு சேர இது நேரந்தாண்டி
ஜாங்குஜக்குச் ஜஜக்குஜக்குஜாங்குஜக்குசஜ
ஜாங்குஜக்குச் ஜஜக்குஜக்குஜாங்குஜக்குசஜ

Chandrothayamm-சந்ரோதயம்

சந்ரோதயம் ஒரு பெண்னானதோ
செந்தாமரை இருகண்னானதோ
பொன்னோவியம் யென்று பேரானதோ
என் வாசல் வழியாக வலம் வந்ததோ
சந்ரோதயம் ஒரு பெண்னானதோ
செந்தாமரை இருகண்னானதோ

குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ
கிளிவந்து கொத்தாத கனியல்லவோ
நிழல்மேகம் தழுவாத நிலவல்லவோ
நெஞ்சொடு நீ சேர்த்த பொருளல்லவொ
என்னாலும் பிரியாத உரவல்லவோ

இளம் சூரியன் உந்தன் வடிவ்! ஆனதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ
பொன்மாளிகை உந்தன் மனமானதோ
என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ

முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ
உள் நெஞ்சில் தொடுகின்ற நெருப்பல்லவோ
சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ
சந்தோஷம் வருகின்ற வழியல்லவோ
என்கோவில் குடிகொண்ட சிலைஅல்லவோ - (சந்ரோதயம்)

அலையொடு பிற்வாத கடல் இல்லையே
நிழலோடு நடக்காத உடல் இல்லயெ
துடிக்காத இமையொடு விழி இல்லயெ
துனையோடு சேராத இதம் இல்லயெ
என் மெனி உனதன்றி யெனதில்லயே

இதழொடு இதழ் வைது இமை மூடவோ
விழுகின்ற சுகம் வாங்க தடை போடவோ
மடி மீது தலை வைத்து இழைப்பாரவோ
முகத்தோடு முகம் வைத்து முத்தாடவோ
கண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ

இளம் சூரியன் உந்தன் வடிவ்! ஆனதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ
பொன்மாளிகை உந்தன் மனமானதோ
என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ

Tharaimael pirakka vaithaan

உலகத்தின் தூக்கம் கலையாதோ
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ
ஒரு நாள் பொழுதும் புலராதோ

தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தன்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்

தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தன்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்

கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
உறவை கொடுத்தவர் அங்கே
அலை கடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைக் கொடுப்பவர் இங்கே
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல் தான் எங்கள் வீடு
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல் தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இதுதான் எங்கள் வாழ்க்கை
இதுதான் எங்கள் வாழ்க்கை

தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தன்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்
தரைமேல் பிறக்க வைத்தான்

கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடி நீர் தருபவர் யாரோ
தனியாய் வந்தால் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு சாண் வயிறை வளார்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்
ஊரார் நினைப்பது சுலபம்

தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தன்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்
தரைமேல் பிறக்க வைத்தான்

Nee oru-நீ ஒரு காதல் சங்கீதம்

நீ ஒரு காதல் சங்கீதம் வாய் மொழி சொன்னால் தெய்வீகம்


வானம்பாடி பறவைகள் ரெண்டு ஊர்வலம் எங்கோ போகிறது
காதல் காதல் எனுமொரு கீதம் பாடிடும் ஓசை கேட்கிறது
இசை மழை எங்கும்...
இசை மழை எங்கும் பொழிகிறது எங்களின் ஜீவன் நனைகிறது
கடலலை யாவும் இசை மகள் மீட்டும் அழகிய வீணை சுரஸ்தானம்
இரவும் பகலும் ரசித்திருப்போம்

பூவினைச் சூட்டும் கூந்தலில் எந்தன் ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்?
தேனை ஊற்றும் நிலவினில் கூட தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்?
கடற்கரைக் காற்றே...
கடற்கரைக் காற்றே வழியை விடு தேவதை வந்தாள் என்னோடு
மணலலை யாவும் இருவரின் பாதம் நடந்ததைக் காற்றே மறைக்காதே
தினமும் பயணம் தொடரட்டுமே

Azhagu malaraada-அழகு மலராட

அழகு மலராட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது
(அழகு)
ஊதாத புல்லாங்குழல் ஒரு பொழுதும் சூடாத பூவின் மடல்
தேய்கின்ற மஞ்சள் நிலா ஒரு துனையை தேடாத வெள்ளை புற
பூங்காற்று மெதுவாக பட்டாலும் போதும்
பொன்மேனி நெருப்பாக கொதிகின்றது
நீரூற்று பாயத நிலம்போல நாலும்
என் மேனி தரிசாக கிடக்கின்றது
தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை
இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை
பதிலேதும் இல்லாத கேள்வி
(அழகு)

ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரை மீது தல்லாடுது
ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது
தாலத்தில் சேரத தனி பாடல் ஒன்று
சங்கீதம் காணமல் துடிகின்றது
விடியாத இரவேதும் கிடையாது என்று
ஊர் சொன்ன வார்தைகள் பொய்யானது
வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெருமா
ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம்
வெரென்ன நான் செய்த பாவம்

Raasaathi unna-ராசாத்தி உன்ன

ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
காத்தாடி போலாடுது
பொழுதாகி போச்சு
வெளக்கேத்தியாச்சு
பொன் மானே உன்ன தேடுது
(ராசாத்தி உன்ன)

கண்ணுக்கொரு வண்ணகிளி
காதுக்கொரு காண குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி
நீதானம்மா
(கண்ணுக்கொரு வண்ணகிளி)

தத்தி தவழும் தங்க சிமிழே
பொங்கி பெருகும் சங்க தமிழே
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
யாரொடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீ தானே கண்ணே நான் வங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே
(ராசாத்தி உன்ன)

மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை
சொன்னால் என்ன
மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை
சொன்னால் என்ன
அத்தை மகளோ மாமன் மகளோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
சந்திததும் சிந்தித்ததும் தித்தித்திட
அம்மாடி நீதான் இல்லாத நாளும்
வென்மேகம் வந்து நீந்தாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்
(ராசாத்தி உன்ன)

Pazhamuthir cholai-

பழமுதிர் சோலை எனக்காக தான்
படைத்தவன் படைத்தான் அதற்க்காக தான்
நான் தான் அதன் ராகம் தாலமும்
கேட்டேன் தினம் காலை மாலையும்
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்.
(பழமுதிர் சோலை)
தூரத்தில் போகின்ற மேகங்களே
தூரல்கள் போடுங்கள் பூமியிலே
வேர் கொண்ட பூஞ்சோலை நீர் கொண்டு ஆட.
ஏரியில் மீன் கொத்தும் நாரைகளே
சிறகுகள் எனக்கில்லை தாருங்களே
ஊர்விட்டு ஊர் சென்று காவியம் பாட!
பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும்
பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும்
ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே
(பழமுதிர் சோலை)
பந்தங்கள் யாவும் தொடர்கதை போல்
நாளும் வளர்ந்திடும் நினைவுகளால்
நூலிலை போல் இங்கு நெருங்கிய இதயங்கள்
பாலுடன் நெய்யென கலந்திடும் நாள்
தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உரவுகள் மேவி
பிள்ளைகள் பேணி வழர்ந்தது இங்கே
மண்ணில் இதை விட சொர்கம் எங்கே
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
இலக்கியம் போல் எங்கல் குடும்பமும் விளங்க
இடை விடாது மனம் மகிழ்சியில் திழைத்திட
(பழமுதிர் சோலை)

Naanaga-நானாக நான் இல்லை தாயே

நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயெ
பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணார கண்டான் உன் சேயே
(நானாக நான் இல்லை தாயே)

கீழ் வானிலே ஒளி வந்தது
கூண்டை விட்டு கிளி வந்தது
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
வாடும் பயிர் வாழ
நீதானே நீர் வார்த்த கார்மேகம்
நானாக நான் இல்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே

மனி மாளிகை மாடங்களும்
மலர் தூவிய மஞ்சங்களும்
தாய் வீடு போல் இல்லை
அங்கு தாலட்ட ஆளில்லை
தாய் வீடு போல் இல்லை
அங்கு தாலட்ட ஆளில்லை
கோவில் தொழும் தெய்வம்
நீ இன்றி நான் காணவேறில்லை
(நானாக நான் இல்லை தாயே)

Keladikanmani-கேளடி கண்மணி

கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி.
நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென நான் கூற...
(கேளடி கண்மணி..)
என்னாளும் தானே தேன் விருந்தாவது
பிறர்க்காக நான் பாடும் திரைப்பாடல்தான்
இன்னாளில் தானே நான் இசைதேன் அம்மா
எனக்காக நான் பாடும் முதல்பாடல்தான்
கானல் நீரால் தீராத ராகம்
கங்கை நீரால் தீர்ந்ததம்மா
நான் போட்ட பூமாலை மனம் சேர்க்கவில்லை
நீ தானே எனக்காக மடல் பூத்த முல்லை...

நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான்
நான் தேடும் சுமைதாங்கி நீ அல்லவா
நான்வாழும் நேரம் உன் மார்போடு தான்
நீ என்னை தாலட்டும் தாய் அல்லவா
ஏதோ ஏதோ ஆனந்த ராகம்
உன்னால் தானே உண்டானது
கால் போன பாதைகள் நான் போன போது
கைசேர்த்து நீ தானே மெய் சேர்த்த மாது....
(கேளடி கண்மணி..)

Kalyana maalai-கல்யாண மாலை

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உன்மைகள் சொல்வேன்
ஸ்ருதியோடு லயம் போலவே-
இனையாகும் துனையாகும் சம்சார சங்கீதமே...
(கல்யாண மாலை..)
வாலிபஙகள் ஒடும் வயதாகக் கூடும்
ஆனாலும் அன்பு மாரதது
மாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அரியாதது
அழகான மனைவி அன்பான துனைவி
அமைந்தாலே பேரின்பமே
மடி மீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாலில் நேசம் ஒரு கோடி
நெஞ்சம் எனும் வீணை பாடுமே தோடி
சந்தோச சாம்ராஜியமே...
(கல்யாண மாலை..)
கூவுகின்ற குயிலை கூட்டுகுள் வைத்து
பாடென்று சொன்னால் பாடதம்மா
சோலை மயில் தன்னை சிரை வைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடதம்மா
நாள்தோரும் ரசிகன் பாரட்டும் கலைஞன்
காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே
துக்கம் சில நேரம் பொங்கி வரும் பொதும்
மக்கள் மணம் போலே பாடுவேன் கண்ணே
என்சோகம் என்னோடுதான்...
(கல்யாண மாலை..)