Followers

Monday, May 18, 2009

Raasaathi unna-ராசாத்தி உன்ன

ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
காத்தாடி போலாடுது
பொழுதாகி போச்சு
வெளக்கேத்தியாச்சு
பொன் மானே உன்ன தேடுது
(ராசாத்தி உன்ன)

கண்ணுக்கொரு வண்ணகிளி
காதுக்கொரு காண குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி
நீதானம்மா
(கண்ணுக்கொரு வண்ணகிளி)

தத்தி தவழும் தங்க சிமிழே
பொங்கி பெருகும் சங்க தமிழே
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
யாரொடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீ தானே கண்ணே நான் வங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே
(ராசாத்தி உன்ன)

மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை
சொன்னால் என்ன
மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை
சொன்னால் என்ன
அத்தை மகளோ மாமன் மகளோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
சந்திததும் சிந்தித்ததும் தித்தித்திட
அம்மாடி நீதான் இல்லாத நாளும்
வென்மேகம் வந்து நீந்தாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்
(ராசாத்தி உன்ன)

No comments: