கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி.
நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென நான் கூற...
(கேளடி கண்மணி..)
என்னாளும் தானே தேன் விருந்தாவது
பிறர்க்காக நான் பாடும் திரைப்பாடல்தான்
இன்னாளில் தானே நான் இசைதேன் அம்மா
எனக்காக நான் பாடும் முதல்பாடல்தான்
கானல் நீரால் தீராத ராகம்
கங்கை நீரால் தீர்ந்ததம்மா
நான் போட்ட பூமாலை மனம் சேர்க்கவில்லை
நீ தானே எனக்காக மடல் பூத்த முல்லை...
நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான்
நான் தேடும் சுமைதாங்கி நீ அல்லவா
நான்வாழும் நேரம் உன் மார்போடு தான்
நீ என்னை தாலட்டும் தாய் அல்லவா
ஏதோ ஏதோ ஆனந்த ராகம்
உன்னால் தானே உண்டானது
கால் போன பாதைகள் நான் போன போது
கைசேர்த்து நீ தானே மெய் சேர்த்த மாது....
(கேளடி கண்மணி..)
Monday, May 18, 2009
Keladikanmani-கேளடி கண்மணி
Labels:
1980's,
Ilayaraja,
K.Balachandar,
Love,
Puthu puthu arthangal,
Rahman
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment