பழமுதிர் சோலை எனக்காக தான்
படைத்தவன் படைத்தான் அதற்க்காக தான்
நான் தான் அதன் ராகம் தாலமும்
கேட்டேன் தினம் காலை மாலையும்
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்.
(பழமுதிர் சோலை)
தூரத்தில் போகின்ற மேகங்களே
தூரல்கள் போடுங்கள் பூமியிலே
வேர் கொண்ட பூஞ்சோலை நீர் கொண்டு ஆட.
ஏரியில் மீன் கொத்தும் நாரைகளே
சிறகுகள் எனக்கில்லை தாருங்களே
ஊர்விட்டு ஊர் சென்று காவியம் பாட!
பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும்
பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும்
ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே
(பழமுதிர் சோலை)
பந்தங்கள் யாவும் தொடர்கதை போல்
நாளும் வளர்ந்திடும் நினைவுகளால்
நூலிலை போல் இங்கு நெருங்கிய இதயங்கள்
பாலுடன் நெய்யென கலந்திடும் நாள்
தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உரவுகள் மேவி
பிள்ளைகள் பேணி வழர்ந்தது இங்கே
மண்ணில் இதை விட சொர்கம் எங்கே
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
இலக்கியம் போல் எங்கல் குடும்பமும் விளங்க
இடை விடாது மனம் மகிழ்சியில் திழைத்திட
(பழமுதிர் சோலை)
Monday, May 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment